முனைவர் சொற்கோ கருணாநிதி எம்,ஏ, எம்.ஃபில்,பிஎச்டி,எம்ஃபில் ஆய்வில் தங்கப்பதக்கம் பெற்றவர். 2000 ஆம் ஆண்டு அழகப்பா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.ஐந்து நூல்கள் எழுதியவர். கவிஞர், பேச்சாளர் மற்றும் நடிகர். தமிழக அளவிலானக் கவிதைப் போட்டிகளில் முப்பத்திரண்டு முறை முதற்பரிசு பெற்றவர்.
சென்னை நந்தம் கலைக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.1995 ல் குமுதம்\இசைஞானி நடத்திய திரைப்பாடல் எழுதும் போட்டியில் முதற்பரிசு தங்கப்பேனா பெற்றவர்.இசைஞானி இளையராஜா இசையில் உருவான அழகி,மனசெல்லாம்,ஜூலிகணபதி உள்பட பல படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர். திருப்பதி, சிதம்பரத்தில் ஒரு அப்பாச்சாமி, சிவகாசி போன்ற படங்களில் நடித்தவர்.
தமிழக அரசு இவருக்கு 2010 ஆம் ஆண்டில் சிறந்த ஆசிரியர் விருதினை நல்கியது.உவமைக்கவிஞர் சுரதாவால் "மரபுக்கவிதை மணிமகுடம்" எனப் பாராட்டப்பட்டவர்.இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்கள் கவிஞர் சொற்கோ கருணாநிதி கவிதைகளில் பாரதியின் நயங்களைப் பார்க்கிறேன்" எனப் பாராட்டியுள்ளார்.
புலவர் புலமைப்பித்தன் "கவிஞர் சொற்கோ கருணாநிதி கவியரங்கில் முதல்வன்" என்றும்,கவிஞர் முத்துலிங்கம் "சொற்கோ கருணாநிதி தமிழுக்கு ராஜயோகம்" என்றும்,மு.மேத்தா "கருணாநிதி கவியரங்களின் கதாநாயகன்" என்றும் பாராட்டியுள்ளனர்.
"கவிஞர் சொற்கோ கருணாநிதி பன்முகப் பேராற்றல் உடைய பாவலர்" என்று கவிக்கோ அப்துல் ரகுமானும்,'டி.கே.சி உயிரோடிருந்தால் சொற்கோ கருணாநிதிக்கு ஒரு கனகாபிசேகம் செய்திருப்பார்" என்று பெருங்கவிஞர் வாலியும் பாராட்டியுள்ளனர்.
ஆயிரத்திற்கு மேற்பட்ட கவியரங்குகளில் பங்கேற்றவர்.கோவை உலகத் தமிழ் மாநாட்டில் கவிப்பேரரசு தலைமையில் கவி பாடியவர்.மும்பை, சிங்கப்பூர் சென்று இலக்கியப் பொழிவாற்றியவர்.அனைத்து வானொலி தொலைக்காட்சிகளிலும் கவிதை பாடியவர்.
பொதிகைத் தொலைக்காட்சியில் ஆறு மாதங்கள் கவியரங்கத் தலைமையேற்று கவிதை பாடியவர். மக்கள் தொலைக்காட்சியில் 8 மாதங்கள் "கவிதை சொல்லலாம் வாங்க" நிகழ்வில் கவியரங்கத் தலைமையேற்றவர்.
மேனாள் அமைச்சர் முனைவர் மு.தமிழ்க்குடிமகனின் நேர்முக உதவியாளராகப் பணியாற்றியவர்.